"யூடியூபை பலர் தவறாக பயன்படுத்துகிறார்கள்" சாட்டை துரைமுருகன் தொடர்பான அவதூறு வழக்கில் நீதிபதி கருத்து

0 2006

யூடியூப் மூலம் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் அதனை பலர் தவறாக உபயோகப்படுத்தி வருவதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து யூடியூபில் அவதூறு பரப்பியதாக சாட்டை துரைமுருகன் என்பவர் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், மீண்டும் யூடியூபில் அதே போன்று அவதூறு பரப்பியதாகவும், அவரது ஜாமீனை ரத்து செய்யக்கோரியும் காவல்துறை சார்பில் மனு அளிக்கப்பட்டது.

அதனை விசாரித்த நீதிபதி புகழேந்தி, இந்தியாவில் பல லட்சம் பேருக்கு யூடியூப் வேலை வழங்கி உள்ளதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் யூடியூபை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கான வழிமுறைகள் தேவை என தெரிவித்த நீதிபதி, யூடியூபில் தேவையற்ற பதிவுகளைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அரசிடம் என்ன திட்டம் உள்ளது? அதற்கான சாத்தியக்கூறுகள் என்ன? என்பன குறித்த விபரங்களை பதில் மனுவாக தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments